பதிவு செய்த நாள்
15
செப்
2012
11:09
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, கொல்லப்பட்டியில் நடந்த மகாமுனியப்பன் கோவில் திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.இடைப்பாடி அருகே கொல்லப்பட்டி பகுதியில், மகாமுனியப்பன், தாலிகாத்த மாரியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் திருவிழா, கடந்த வாரம் துவங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடுகள், கோழிகள் பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொல்லப்பட்டி, பூக்குட்டிவளவு, மூலப்பாதை பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 500க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 200க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.