பதிவு செய்த நாள்
15
செப்
2012
11:09
காவேரிப்பபட்டணம்: காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில், இன்று (செப்., 15) அமாவாசை நடக்கிறது.இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பகல், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை, 6 மணிக்கு அம்மன் பிரஹார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.தர்மபுரி, வெளிப்பேட்டை தெரு, அங்காளம்மன் கோவிலில், காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம், 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு சாமபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
தர்மபுரி, எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், கீழ்தெரு தாசஆஞ்சநேயர் கோவில், கெரகோடஹள்ளி வீர தீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அமாவாசையையொட்டி, இன்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடை மாலை சாத்துதல், வெள்ளி கவசம் சாத்துதல், வெண்ணெய் காப்பு அலங்காரம் நடக்கிறது.