Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருக பெருமான் ... கோதண்டராமர் கோவிலில் மாணவர்களுக்காக லஷ்மி ஹயக்ரீவ ஹோமம் கோதண்டராமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவில் புனிதம் கெட்டு விட்டதாக குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவில் புனிதம் கெட்டு விட்டதாக குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்

18 மார்
2023
02:03

தஞ்சை பிரகதீசுவரர் கோவில் வளாகத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதனால், கோவிலின் புனிதத் தன்மை கெட்டு போய் விட்டது, என, ஹிந்து அறநிலைய துறை ஆணையருக்கு, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து, ராம.ரவிக்குமார் கூறியதாவது:தஞ்சை பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னம். இக்கோவிலை, தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்து பராமரித்து வருகிறது. கோவிலை நிர்வகிப்பது, பூஜைகள், விழாக்கள் நடத்தும் பொறுப்பை, ஹிந்து அறநிலைய துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பொறுப்பு: தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆகமங்கள் உள்ளன. கோவிலின் புனிதத் தன்மைக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, கோவில் நிர்வாகத்தின் பொறுப்பு. ஒரு வாரத்துக்கு முன், கோவிலுக்கு வந்த மாற்று மத குடும்பம், கோவில் வாயிலில் அமர்ந்து, மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்தனர். அதை அறிந்ததும், உடனடியாக அங்கு வந்த நிர்வாகிகள், காவலர்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களை விரட்டி உள்ளனர். இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியானது. கோவிலுக்குள் சென்று சுற்றி பார்த்தேன். வேறு சில அசிங்கங்களும் அரங்கேறுவதாக பலர் குறைபட்டனர். எந்த மதத்தை பின்பற்றுவோரும் தஞ்சை பெரிய கோவிலுக்குள் வந்து வழிபடலாம்; தடை எதுவும் கிடையாது. ஆனால், எக்காரணம் கொண்டும், கோவில் புனிதம் கெட்டு விடக் கூடாது.

கடிதம்: ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் தான் நடந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பு. இனி, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கக் கூடாது. அதற்கு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஹிந்து அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.கோவிலில் அசைவம் சாப்பிட்டால், அது கோவிலின் புனிதத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்ற பதற்றமும், இறைவன் மீது பக்தியும் கோவிலை நிர்வகிக்கும் அறங்காவலருக்கும், அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும்.
அத்தகைய உணர்வு இல்லாதவர்கள், கோவில்களை பராமரிப்பது மிகப் பெரிய தவறு என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

 நிர்வாகம் செய்வது சிரமம்: தஞ்சை பெரிய கோவில் அதிகாரி கூறியதாவது:தஞ்சை பெரிய கோவிலுக்கு சாதாரண நாட்களில் கூட, 5,000 பேர் வந்து செல்கின்றனர். கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.காவலர்கள் சாப்பிட சென்றபோது, கோவிலுக்கு வந்தவர்கள், கோவில் நுழைவு வாயிலில் அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். விஷயம் தெரிய வந்ததும், அங்கிருந்து போகச் சொல்லி விட்டோம். வாசலில் நடந்த சம்பவத்துக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. காவலர்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். இதனால், கோவில் புனிதம் கெடாது. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கோவிலுக்குள் நடக்கும் சிறு சிறு சம்பவங்களையும் சர்ச்சையாக்கினால், நிர்வாகம் செய்வது சிரமம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar