காரைக்குடி: காரைக்குடியில் சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள காட்டம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலின், உப கோயிலான காட்டம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த மார்ச் 13 ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மார்ச் 14ஆம் தேதி கணபதி ஹோமமும் 15ஆம் தேதி வாஸ்து சாந்தி முதற்கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 16 ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும் நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9: 50 மணிக்கு விமான கும்பாபிஷேகம் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மகேந்திர பூபதி செய்திருந்தனர்.