மதுரை மீனாட்சி அம்மன் மாசி மண்டல உற்ஸவம் : நிர்வாக கணக்கு சுவாமி சுந்தரேஸ்வரரிடம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2023 10:03
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல உற்ஸவத்தில் நிர்வாக கணக்கு வாசிக்கப்பட்டு அதன் விபரம் அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. மாசி திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும். விழாவையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். தொடர்ந்து விழாவில் பிரதான கொடியிறக்கி, நிர்வாக கணக்கு வாசிக்கப்பட்டு அதன் விபரம் அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.