சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் அருகே பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற உலகம்மாள் கோயில் உள்ளது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஜன., 27 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணியளவில் யாக வேள்வி பூஜைகள் நடந்தது. மூலவர் உலகம்மாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் உலகம்மாள் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.