குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி இராமகிரியில் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கொடி ஏற்றம் நடந்தது. தொடர்ந்து திருபல்லக்கு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், 4.4.23 திருக்கல்யாண உற்சவமும், 5.4.23 திருப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறும். 6.4.23 வியாழன் காலை 9:30 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கோவில் தக்கர் சீனிவாசன், செயல் அலுவலர் முருகன் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.