பரமக்குடி: பரமக்குடி கோயில்களில் சனி பெயர்ச்சி விழா நடந்தது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை 9:00 மணி தொடங்கி அனுக்கை, கலச ஸ்தாபனம், பூஜார்ச்சனை, சனீஸ்வரர் சாந்தி ஹோமம், மற்றும் நவக்கிரக சாந்தி ஹோமம் நடந்தது. காலை 11:30 க்கு மகாபூர்ணாகுதி நிறைவடைந்து, 13 வகையான அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம், தீபராதனைகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு சனீஸ்வரர் சகஸ்ர நாம அர்ச்சனை, ஜெப பாராயணம், திருவாராதனம் நடந்தது. மேலும் மார்ச் 30 தொடங்கி ஏப்., 6 வரை காலை 7:00 மணி முதல் 10:00 மணிக்குள் சனீஸ்வரர் சாந்தி ஹோமம் நடக்க உள்ளது. *எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவகிரக சன்னதியில் சனிப் பெயர்ச்சி விழா நடந்தன. தொடர்ந்து காலை தொடங்கி சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்திருந்தனர்.