பழநி பங்குனி உத்திர விழா: தீர்த்தக் காவடியுடன் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2023 08:03
பழநி: பழநி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து அதிக அளவில் வருகின்றனர்.
பழநி, பங்குனி உத்திர திருவிழா மார்ச் 29 முதல் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீர்த்த காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் தர்மபுரி திருப்பூர் ஈரோடு கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீர்த்தக்காவடிகள் பக்தர்கள் எடுத்து வருகின்றனர். சந்தன காவடி, இளநீர் காவடி, பால் காவடி, உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அடிவாரம் கிரிவீதி பகுதிகளில் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் அரோகரா கோஷத்துடன் மலைக்கோயிலை வலம் வருகின்றனர். அதன்பின் மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று எஸ்.பி. பாஸ்கரன் அடிவாரம், படிப்பாதை, மலைக்கோயில் வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பங்குனி உத்திர பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அதன்பின் சுவாமி தரிசனம் செய்து திரும்பினார்.