பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி தேரோட்டம் நாளை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2023 09:04
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி உத்திரதேரோட்டம் நாளை (ஏப்.3) மாலை நடக்கிறது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா மார்ச் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனித்தனி சன்னதிகளுக்கு தலா ஒரு கொடி மரம் அமைந்துள்ளது விசேஷமாகும். பங்குனி ஒவ்வொரு நாளும் இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. ஆறாம் நாள் திருவிழா கணக்கு வேலாயி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். மண்டகபடி பூஜையில் திரு ஞானசம்பந்தருக்கு அறம் வளர்த்த நாயகி பால் ஊட்டும் நிகழ்வு நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கணக்கு வேலாயி அம்மாள், துரைராம சிதம்பரம், அமராவதி அம்மாள், சிதம்பர சூரியநாராயணன் நினைவாக சிதம்பரசூரிய வேலு குடும்பத்தினர் மண்டகப்படி நடத்தினர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய திருவிழாவான 9 ம் நாள் திருவிழா தேரோட்டம் நாளை மாலை 4:30 மணிக்கு மேல் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள், கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.