மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டனர். பின்பு கோவிலில் மஞ்சள், அரிசி இடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் பக்தர்கள் அலகு குத்தியும் தேர் இழுத்தும் அவர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கியது.