சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.மாம்பட்டி கிராம புரவியெடுப்பு நடந்தது.
சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி கிராம புரவி எடுப்பு திருவிழா நடந்தது. திருவிழாயொட்டி 2 மாதங்களுக்கு முன்பு கிராமத்தார்கள் சார்பில் பிடிமண் கொடுக்கப்பட்டு புரவிகள் செய்யப்பட்டது. மார்ச் 31 ம் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. ஏப். 7 ம் தேதி மாலை 4:30 மணிக்கு புரவி பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் எடுத்துவரப்பட்டது. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏப். 8 ம் தேதி மாலை 5:30 மணிக்கு அரண்மனை யாணை, அரண்மனை புரவி மற்றும் 56 நேர்த்திக்கடன் புரவிகள் ஊர்வலமாக கரந்தமலை ஐயனார் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. சில புரவிகள் குண்டமடை ஐயனார், செங்குளத்து ஐயனார், மோசிலி ஐயனார் கோயில்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.