காரைக்குடி ராமலிங்க சவுடம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2023 04:04
காரைக்குடி: காரைக்குடி ராமலிங்க சவுடாம்பிகை கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி கத்தி போடும் விழா நடந்தது.
காரைக்குடியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகையம்மன் கோயில் 76வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா மற்றும் கரக உற்சவ விழா கடந்த ஏப்.4 ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முத்தாலம்மன் கோயிலில் சிறுவர்கள் இளைஞர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்தாலம்மன் கோயிலில் இருந்து சக்தி நீர் எடுத்து ஊர்வலமாக வந்து ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் சேர்க்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது. தொடந்து, சவுடாம்பிகை கோயிலில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.