ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுத்திக்கோட்டை, மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று, ஒரு ஆண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து, நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில், அளுந்திக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.