Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2023
04:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பொது சேவை, 11:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மூலஸ்தானத்தில் பஞ்சாங்கம் வாசித்தலும், தொடர்ந்து 6:00 மணிக்கு தேகளீச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடந்தது. ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாசாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். வீரட்டானேஸ்வரர் கோவிலில் காலை 6:30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வித்தியா செல்வ கணபதி ஆலயத்தில் காலை 9:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கல்லூரி தலைவர் செல்வராஜ், பொருளாளர் ஏழுமலை மற்றும் கல்லூரி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar