மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2023 04:04
மேட்டுப்பாளையம்: மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில், சித்திரை மாத முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது. காரமடை அடுத்த மருதூரில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர், திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை அன்று, விழா நடைபெறும். இதை அடுத்து நேற்று சித்திரை மாத முதல் சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்பு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பல வகையான கனிகளால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. காரமடை சுற்றுப்பகுதியில் உள்ள பஜனை குழுவினர், கோவிலில் பஜனை பாடினர். சிறப்பு பூஜை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.