குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று கிருஷணாபுரம் மக்களின் சார்பில் 58வது ஆண்டு திருவீதி உலா நடந்தது. விழாவில், கிருஷ்ணாபுரத்தில் இருந்து தீர்த்த குடம், அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், அன்னதானம், கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. நாதஸ்வரம், தாரை தப்பட்டை, கொம்பு மேளம், முழங்க அம்மன் திரு தேர் ஊர்வலம் நடந்தது. ஆடல் பாடல்களும் பக்தர்கள் பங்கேற்றனர்.