கோவை : காட்டூர் வி.ஜி.லே-அவுட் இல் இருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் 41 -வது ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருவிளக்கு தீபம் ஏற்றினர் .இந்த வைபவத்தில் தேவி கருமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கருமாரியம்மன். இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.