சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 09:05
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிங்க வாகனத்தில் அம்மன் கோயிலில் இருந்து பத்ரகாளியம்மன் கோயிலுக்கு எழுந்தருளி சென்றார். தொடர்ந்து இரவு 7:00 மணி கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை , சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்பிகை திருவீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு, அம்மன் காமதேனு கைலாச பர்வத வேதாள உள்ளிட்ட வாகனங்களில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 8 ம் நாள் திருவிழாவாக மே 9 ல் பொங்கல் திருவிழா, மறுநாள் கயறு குத்து திருவிழா, மே 11 ல் தேரோட்டம் நடைபெறும்.