பதிவு செய்த நாள்
24
மே
2023
05:05
கோத்தகிரி: கோத்தகிரி ராப்ராய் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடித்த நடந்தன. தொடர்ந்து, அம்மன், குதிரைவாகனத்தில், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, பக்தர்களின் பால் குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, பால்குடம், கரகம் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியை தொடர்ந்து, நேர்த்திக்கடன் செயில்லுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுந்தனர். தொடர்ந்து, மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டிளர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.