பாலக்காடு: திருமலை திருப்பதி தேவஸ்தானவும் பாலக்காடு ஸ்ரீ சீனிவாசா சேவா அறக்கட்டளையும் ஒருங்கிணைந்து ஸ்ரீனிவாச திருகல்யாண உற்சவம் வருகிற மே 28ம் தேதி பாலக்காடு இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் வைத்து நடத்தப்படுகின்றன.
உற்சவ நாள் காலை 6 மணிக்கு சுப்ரபாத சேவையில் ஆரம்பித்து அபிஷேகம், தோமாலை சேவை, அர்ச்சனை ஆகியவை நடைபெறும். மாலை 6 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீதேவி-பூமா தேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மூர்த்தியின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இந்நிகழ்வில் அனைத்து பக்தர்களுக்கும் தரிசித்து வழிபட வசதி அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதிக்குச் நேரில் சென்று மூலவரை தரிசிக்க முடியாதவர்களுக்கு இங்கு தரிசித்து வழிபட்டு அருள் பெறலாம். தவிர இங்கு நடத்தப்படும் ஒவ்வொரு பூஜையும் திருப்பதியில் சென்று பார்க்க வேண்டும் என்றால் தேவஸ்தானத்தின் ஆன்லைன் குலுக்கலில் பங்கு கொண்டு அதிர்ஷ்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே இ பூஜைகள் அனைத்தும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்று அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.