பதிவு செய்த நாள்
30
மே
2023
09:05
சென்னை: வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
வடபழநி முருகன் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (மே 30) தேரோட்டம் சிறப்பா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, முருகப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அரோகரா கோஷத்துடன், ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்தனர். ஜூன் 2ம் தேதி வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற விருக்கிறது. அன்று சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீர்த்தவாரி, சுவாமி உலா நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர் என்பதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.