பதிவு செய்த நாள்
30
மே
2023
10:05
சபரிமலை ; சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜைக்காக நடை இன்று திறக்கப்பட்டது.
பிரதிஷ்டை தின பூஜைக்காக சபரிமலையில் நடை திறந்து, மேல்சாந்தி தீபம் ஏற்றினார். அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின், நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை, 7:30 மணிக்கு, உதயாஸ்தமன பூஜை நடைபெற்றது. பகல், 12:30 மணிக்கு, பிரதிஷ்டை தின சிறப்பு களபாபிஷேகம் நடைபெற்ற பின், உச்சபூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். பகல், 1:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 6:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து புஷ்பாபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு படிபூஜையும் நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.