மயிலாடுதுறை: கோலாகலமாக நடைபெற்ற பெரம்பூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை கந்த புஷ்கரன் குளக்கரையில் இருந்து பம்பை, மேள வாத்தியம் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு வீதி உலாவாக கோவிலுக்கு வந்தடைந்தது. இதனையடுத்து கோவிலுக்கு எதிரே அமைக்கபட்டு இருந்த தீக்குண்டத்தில் கரகம் இறங்கியது. அதனை தொடர்ந்து விரதம் இருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.