மேலுார்: அட்டப்பட்டியில் உள்ள பெரிய பனையூர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு தும்பைபட்டி குதிரை பொட்டலில் இருந்து புரவியை பொதுமக்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் சுவாமி சிலைகளை கோயிலுக்கு கொண்டு சென்றனர். இன்று கோயில் முன்பு எருதுகட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இத் திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.