பாலமேடு: பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோயில் பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. ஜூன் 2 வலம்புரி விநாயகருக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்தனர். ஆண்கள் பாரம்பரிய வழக்கப்படி பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்றனர். அன்றிரவு அம்மனுக்கு திருக்கண் திறப்பு அலங்காரம் நடந்தது. ஜூன் 3 சக்தி கிடா வெட்டியும், மஞ்ச கருப்பசாமிக்கு செலாகுத்தலை தொடர்ந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை வான வேடிக்கை மேளதாளத்துடன் ஏராளமான பெண்கள் பழ தட்டுடன் ஊர்வலமாக செல்லாயி அம்மன் கோயில் சென்றனர். சிறப்பு அபிஷேக, ஆராதனையை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கிழக்குத் தெரு உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.