Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி; ... விஸ்வேஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு விடையாற்றி உற்சவம் விஸ்வேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் விழாவில் திருத்தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் விழாவில் திருத்தேரோட்டம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2023
11:06

மயிலாடுதுறை ; தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது, தருமபுரம் ஆதீனகர்த்தர் உள்ளிட்டோர் வடம் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு மேற்கொண்டார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு தற்போதைய ஆதினம் நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் தற்போதைய ஆதீனத்தை பக்தர்கள் சிவிகைப் பள்ளத்தில் அமர்த்தி தூக்கிச் செல்லும் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar