பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
10:34
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், 1.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.
தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆண்டுதோறும், வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கடந்த மே 7ம் தேதி முதல் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வரையிலான, ஒரு மாதத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒரு மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணியில், அடிவாரத்தில் இருந்து 4வது மழை வரை இருந்த, சுமார் 1.5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஈஷா தன்னார்வலர்கள் மட்டுமின்றி, இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.