ஐயப்பன் கோயில் யாகசாலை பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2023 05:06
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெரு, காந்தி நகர் ஐயப்பன் கோயில் கும்பாபிஷே விழா இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக விழாவை முன்னிட்டு ஜுன் 7ல் சிவாச்சாரியார் மணிகண்டன் தலைமையில் விக்னேஸ்வரர், விநாயகர் பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் துவக்கின. நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீபாராதனைகளையும் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக இன்று (ஜூன் 9) காலை 7:35 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பாலைக்குடி மீனவ பட்டங்கட்டிய சமூகத்தார் மற்றும் ஐயப்ப சுவாமி குருமார்கள் செய்து வருகின்றனர்.