வீடு, அலுவலகச்சுவரில் சுவாமி படங்களை மாட்டி வைத்திருப்பீர்கள். இந்தப் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும். இந்த திசைகள் சுத்தமானவை. மற்ற இரண்டும் அசுத்தமானவை. ஆனாலும், ஒரு விதிவிலக்கு இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மற்றும் உக்ர தெய்வங்களான காளி, துர்க்கை, நரசிம்மர், பைரவர், மகான்கள் படங்களை தெற்கு திசை நோக்கி மாட்டலாம். பெருமாள், லட்சுமி, சிவன், காளி, துர்க்கை நீங்கலான அம்மன்கள், விநாயகர், முருகன் உள்ளிட்ட பிற படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும். இதுவரை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. இனிமேல் மாற்றிக் கொள்ளுங்களேன்!