காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி வரும் 28ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 05:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்காக, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஆறு மாதங்களுக்கு முன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, என்னென்ன பணிகள் நடக்க இருக்கின்றன என, அறநிலையத் துறை கமிஷனருக்கு தகவல் அனுப்பட்டது. அனுமதி பெறுவதற்கும் மற்றும் திருப்பணி குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கவும் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, வரும் 28ம் தேதி துவங்க இருக்கிறது. 2006ல், கும்பாபிஷேகம் நடந்தது. 17ஆண்டுகளுக்கு பின், திருப்பணி துவங்க இருக்கிறது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: திருப்பணிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி விட்டோம். அனுமதிக்காக காத்திருந்தோம். அதற்கான உத்தரவு வந்துள்ளது. வரும் 28ம் தேதி திருப்பணி முறைப்படி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.