செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2023 12:06
திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 24ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. 7ம் நாளான வரும் 22ம் தேதி, காலை10.30 மணிக்கு அழகிய கூத்தர், சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 23ம் தேதி காலை10 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், மாலை 5 மணிக்கு பச்சைசாத்தி தரிசனம் நடக்கிறது. 9ம் திருநாளான 24ம் தேதி, மதியம் 12.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. 25ம் தேதி, காலை11 மணிக்கு மகாஅபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி வீதி உலாவருதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பிற்கால அபிஷேகம், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் செல்வி, செயல் அலுவலர் அசோக் குமார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.