திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் வருஷாபிஷேகம்; 26ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2023 11:06
திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 26ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி, 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திர நாளான வரும் 26ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது. இதை ஒட்டிஅன்று அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதிஹோமம், சுகிர்தஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகர பெருமாளுக்கு நவகலச பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடக்கிறது. ‘இருளில் மூழ்கும் சன்னதிகள்’: திருவட்டார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட புதிய ஜெனரேட்டரை ஒப்பந்தக்காரர் இதுவரை ஒப்படைக்கவில்லை. மின்வெட்டின் காரணமாக இரவு நேரங்களில் கோவில் இருளில் மூழ்குகிறது. இதனால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். இதேபோல் பஞ்சவாத்தியம் மற்றும் நாதஸ்வரம் வாசிக்க புதியதாக ஆள்நியமிக்க வேண்டும் என ஸ்ரீ ஆதிகேசவ பக்தர்கள் சங்க டிரஸ்ட் தலைவர் ராஜே ந்திரன் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார்.