அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு செல்லும் நேரம் மாற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 05:06
பெ.நா.பாளையம்: பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் படிக்கட்டுகளில் செல்லும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கோவை வனச்சரகம், பெரிய தடாகம் அருகே மலை மீது அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலங்களாக யானைகள் கோவில் படிக்கட்டுகளை கடந்து தண்ணீர் குடிப்பதற்காக சென்று வருகின்றன. மேலும், இவை யானைகளின் முக்கியமான வழி பாதையாகும். ஆகவே, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் படிக்கட்டில் செல்ல காலை, 9:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுபவர். இது தொடர்பாக விழிப்புணர்வு பலகை வைக்கவும், கண்காணிப்பு பணியில் ஆட்களை நியமனம் செய்யவும், கோவை வனத்துறை, அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கி உள்ளது.