கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2026 10:10
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதி மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறதுஇந்த நாளில் முன்னோர்கள் வழிபாடு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்ததாகும் மாதந்தோறும் வரும் அமாவாசை நாளன்று நம் முன்னோர்கள் மூன்று தலைமுறைக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் மஹாளய அமாவாசை அன்று தந்தை வழி மற்றும் தாய் வழி மற்றும் நம் உறவினர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பது மிக சிறந்ததாகும் இந்நாளில் பித்ரு பச்சத்தின் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வரும் நிறைவு நாள் என்பதால் இந்த அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. அமாவாசை முடிந்து நவராத்திரி மற்றும் துர்கா பூஜை தொடங்குகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை வைத்து வழிபட்டு காகத்திற்கு மற்றும் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது என்பது ஐதீகமாக உள்ளது. இதனை முன்னிட்டு பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஏராளமானோர் எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர், ஏழை எளியோருக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர்.தொடர்ந்து, பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், குழாய்கள் அமைத்து தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.