Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய ... திருவண்ணாமலையில் மகாளய அமாவாசை;  அய்யங்குளக்கரையில் அலைமோதிய பக்தர்கள் திருவண்ணாமலையில் மகாளய அமாவாசை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழனின் 1041வது சதய விழா; தஞ்சாவூர் பெரியகோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழனின் 1041வது சதய விழா; தஞ்சாவூர் பெரியகோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

10 அக்
2026
11:10

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு, ஐப்பசி மாத சதய நட்சத்திர தினமன்று, சதய விழா என்ற பெயரில், இரு நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். 


இவ்வாண்டு, அக்., 21 மற்றும் 22ம் தேதிகளில், சதய விழா நடைபெற உள்ளது. பெரிய கோவில் வளாகத்தில், இன்று (10ம் தேதி) காலை, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் சரவணன்,  தஞ்சாவூர் எம்எல்ஏ சரவணன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில், பந்தல்காலுக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நடப்பட்டது. இதில், பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அக்., 21ம் தேதி பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், சொற்பொழிவு நடைபெறுகின்றன. அக்.22ம் தேதி காலை தேவார நுாலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறும். பிறகு, மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைக்கு சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகின்றன. இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar