காளஹஸ்தி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2023 04:06
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் நேற்று கோயில் நிர்வாக அதிகாரி ராமச்சந்திரா ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏவிஎம் முனிச்சந்திர சேகர் ரெட்டி என்கிற பாலாஜி ரெட்டி முன்னிலையில் கடந்த 60 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பணத்தை கணக்கிடும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர் .அதில் பணமாக நாலு லட்சத்து ஐம்பதாயிரத்து ஐந்து ரூபாய் வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.