பதிவு செய்த நாள்
29
ஜூன்
2023
05:06
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நேற்று துவக்கப்பட்டது.
பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்காக, 17 கோடி ரூபாய் அரசு செலவிலும், 2 கோடி ரூபாய் கோவில் நிதியில் இருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ௨௭ பணிகள் நடக்க இருக்கிறது. மொத்தமாக, 714 பழமையான கோவில்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் வழிகாட்டுதல்படி வரும் ஐந்தாண்டுகளில், 500 கோவில்கள் புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2026க்குள் பணிகள் நடக்க உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு முதல், ௪௨ கோடி ரூபாய் செலவில், 70 கோவில்களில் 123 பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு, ௧௦.௫ கோடி செலவில், 56 கோவில்களில் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.,ஏ., எழிலரசன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அறநிலையத் துறை இணை கமிஷனர் வான்மதி, உதவி கமிஷனர் லட்சுமி காந்தபாரதிதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.