கன்னியாகுமரி: கொட்டாரம் வடக்கு வாசல் மயான சுடலைமாட சுவாமி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (4ம் தேதி) நடைபெற்றது. இதை யொட்டி இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சுடலை மாடசுவாமிக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சுவாமிக்கு களபம் சாத்துதல், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம் நடைபெற்றது. சாய ராட்சை தீபாராதனை 6.30மணிக்கு தப்புமேளமும், இரவு நையாண்டி மேளமும் நடக்கிறது. 8 மணிக்கு மகுட கச்சேரி, 10 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடக்கிறது. 10.30 மணிக்கு பூப்படைப்பும் நள்ளிரவு சுவாமிக்கு ஊட்டுப்படைத்தல் நடக்கிறது.