குபேரபட்டினம் ராஜகுபேரர் கோவிலில் மூலவரை தொட்டு பூஜை செய்ய அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 11:07
காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வெள்ளைகேட் குபேரபட்டினத்தில், ராஜகுபேரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உள்ள மூலவருக்கு வியாழக்கிழமையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இந்நிலையில், நேற்று முதல், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் அறைக்குள் சென்று, தங்கள் கைகளால் குபேரரை தொட்டு பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர் அறையில் ராஜகுபேரரை தரிசித்தனர்.