பதிவு செய்த நாள்
07
ஜூலை
2023
05:07
கம்பம்: கம்பம் நந்தகோபாலசாமி நகரில் ஆனந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக முதற்கால யாக பூஜைகள், மகா கணபதி ஹோமம், கலச ஊர்வலம் நடைபெற்றது. அன்று இரவு சிலை பிரதிஷ்டை, எந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் ஸ்தாபனம் நடைபெற்றது.நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள், மகாசங்கல்பம், கன்னிமார் பூஜை, கோமாதா பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணியளவில் புனிதநீர் கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது . திரளான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் வனிதா, துணை தலைவர் சுனோதா, நகர் தி.மு.க. செயலாளர்கள் வீரபாண்டியன் செல்வக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நந்தகோபாலசாமி நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.