போடி; ஆடிப்புரத்தை (ஆண்டாள் பிறந்த நாளை) முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சன அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளின் தரிசனம் பெற்றனர்.
* போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.