Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ... அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்: நுாபுர கங்கையில் விரித்த கூந்தலுடன் நீராடிய பெருமாள் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரும்பிய தசரா யானைகள் மக்கள் அளித்த பிரியாவிடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரும்பிய தசரா யானைகள் மக்கள் அளித்த பிரியாவிடை

பதிவு செய்த நாள்

23 அக்
2026
12:10

மைசூரு: ஜம்பு சவாரி ஊர்வலம் நிறைவு பெற்ற நிலையில், தசரா யானைகள் மீண்டும் தங்கள் இடத்துக்கு திரும்பின.


மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க, மத்திகோடு, துபாரே, பல்லே உள்ளிட்ட முகாம்களில் இருந்து இரண்டு கட்டமாக 13 யானைகள், மைசூருக்கு அழைத்து வரப்பட்டு, அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டன. தங்க அம்பாரி சுமந்த பிரஷாந்த் உட்பட, 13 யானைக ளுக்கும், தினமும் ஐந்து கி.மீ., துாரம் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. யானைகளை பார்த்து மக்கள் உற்சாகம் அடைந்தனர். நேற்று முன்தினம் ஜம்பு சவாரி நிறைவு பெற்றதும், அரண்மனை வளாகத்தில் யானைகள் நேற்று காலை ஓய்வெடுத்தன. மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து யானைகளை பார்த்தனர். பொதுவாக ஜம்பு சவாரி முடிந்ததும் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகே, யானைகள் அதன் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த முறை நேற்றே அனுப்பி வைக்கப்பட்டன.


இன்று வெள்ளிக்கிழமை என்பதால், மைசூருக்கு வந்த மஹாலட்சுமியை அனுப்பி வைக்க கூடாது என்று முடிவு எடுத்ததாக, வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறினார். லாரிகள் மூலம் புறப்பட்ட யானைகளுக்கு, அரண்மனை நுழைவாயில் பகுதியில் இருபுறமும் கூடி நின்று, மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். யானைகளும் தும்பிக்கையை துாக்கி நன்றி செலுத்தபடி சென்றன. இதை பார்த்து, வனத்துறை ஊழியர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தனர். 


எடை அதிகரிப்பு: மைசூரு தசராவில் பங்கேற்க இரண்டு கட்டமாக யானைகள் வந்த போது, அதற்கு உடல் எடை பரிசோதனை நடந்தது. நேற்று வழியனுப்பு விழாவிற்கு முன்பும், எடை பரிசோதனை நடந்தது. இதில் ஒவ்வொரு யானையும், 200 முதல் 250 கிலோ எடை அதிகரித்து இருப்பதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar