பரமக்குடி: பரமக்குடியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு வைகை ஆரத்தி விழா நடந்தது.
பரமக்குடி பெருமாள் கோயில் வைகை ஆறு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவில் வைகை ஆரத்தி நடந்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் கூடி வைகை தாயை வணங்கினர். அப்போது வைகை ஆற்றிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு மற்றும் சட்டை துணிகள் வழங்கப்பட்டன. அப்போது வரும் நாட்களில் நல்ல மழை பெய்து வைகையில் கடந்த ஆண்டு ஆறு மாதத்திற்கு மேலாக தண்ணீர் ஓடியது போல், இந்த ஆண்டும் நீர் ஆதாரம் பெருக வழிபட்டனர்.