மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வரன் ; குச்சனூரில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2023 11:08
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனி கோயில் குச்சனூரில் மட்டுமே உள்ளது. சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால், இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வர பகவான் இரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால், நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டு ஜூலை 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரண்டு சனிக்கிழமைகளிலும் திருவிழா நடைபெற்றது. இன்று ( ஆக் . 5 ) மூன்றாவது வாரம் பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.