பதிவு செய்த நாள்
16
செப்
2023
12:09
திருவாரூர்: நன்னிலம் அருகே, குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டிய போது, 13 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, நெம்மேலி அடுத்த கல்லுக்குடியில், குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. பொக்லைனில் பள்ளம் தோண்டிய போது, 13 சாமி சிலைகளை பணியாளர்கள் கண்டெடுத்தனர்.அவை, விநாயகர், நடராஜர், துர்க்கை, அம்பாள் சிலைகள், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், நவநீத கிருஷ்ணன் என, தெரிந்தது. இந்த சிலைகள், 1 அடி முதல், 3 அடி உயரம் வரை இருந்தன. சிலைகள், அங்குள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின், நன்னிலம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது.தாசில்தார் ஜெகதீசன் கூறுகையில், சிலைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். ஆய்வுக்கு பின், சிலைகள் ஐம்பொன்னால் ஆனதா அல்லது வெண்கலமா என, தெரியவரும், என்றார்.