பதிவு செய்த நாள்
19
செப்
2023
12:09
பெரியகுளம்: பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சாரல் மழையில் கோலாலமாக சென்றது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் பூஜையுடன் நகரம், ஒன்றியம் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 61 சிலைகள் ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து டெப்போ அருகே சாரல் மழையில் பிரமாண்டமான ஊர்வலம் கோலாகலமாக சென்றது. கவுன்சிலர் சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழாக்குழு தலைவர் ராஜபாண்டியன் தலைமை வைத்தார். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரியன் முன்னிலை வகித்தார். ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன், தேனி வடக்கு மாவட்ட பொது செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்டத் துணைத் தலைவர் திலகர் ஆகியோர் பேசினர். வடகரை, தென்கரை முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறை அருகே வராகநதியில் சிலைகள் கரைக்கப்பட்டது. எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே, ஏ.டி.எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி.,க்கள் கீதா, பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில் ஏராளமான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் வசந்த் பாலாஜி, சஞ்சீவி, ரவிக்குமார், முத்துப்பாண்டி, கோபிகண்ணன், சன்னாசி பாபு கிருஷ்ணமூர்த்தி, பாலச்சந்திரன் உட்பட ஹிந்து முன்னணி, பா.ஜ., வினர் செய்திருந்தனர்.