கோவிந்தா கோஷத்துடன் திருப்பதியில் தேரோட்டம்; இரு தேவியருடன் வலம் வந்த மலையப்பசுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2023 11:09
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி, இரு தேவியருடன் கம்பீரமாக தேரில் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருமலையில் நடக்கும் ரதோத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. "ரதஸ்தம் கேசவம் த்ரிஷ்ட்வா புனர்ஜன்மனவித்யதே" ரதோத்ஸவம் முக்தி என்று விளக்குகிறது. இன்று திருமலை ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கம்பீரமாக தேரில் எழுந்தருளிய மலையப்பசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். விழாவில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெத்தஜீயர்சுவாமி, திருமலை ஸ்ரீ ஸ்ரீ சின்னஜெயர்சுவாமி, TTD தலைவர் ஸ்ரீ பூமன கருணாகர் ரெட்டி, தர்மா ரெட்டி, ராஜ்யசபா உறுப்பினர்கள் ஸ்ரீ வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி, டெல்லி உள்ளாட்சி மன்றத் தலைவர் வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சதா பார்கவி, வீரபிரம்மன், சி.வி.எஸ்.ஓ திரு.நரசிம்ம கிஷோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.