கோட்டை மாரியம்மன் கோவிலில் மூலவர் மீது அமர்ந்துள்ள கிளி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2023 11:09
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது அமர்ந்துள்ள கிளி, இரண்டு நாட்களாக அங்கேயே உள்ளதால் பக்தர்கள்ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி நடக்கிறது. அடுத்த மாதம் 27ல் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 23ம் தேதி காலை, ஒரு கிளி பறந்து கோவிலுக்குள் வந்தது. அது, அம்மன் சிலை மீது அமர்ந்து கொண்டது. நாள் முழுதுமே அந்தக்கிளி வேறு எங்கும் செல்லவில்லை. மறுநாளும் அம்மன் சிலை மீதே அமர்ந்து இருந்தது. இதனால் பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்தக்கிளியை மொபைல் போனில் படம், வீடியோ எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து அர்ச்சகர் சிவகுமார் கூறுகையில், ‘‘கிளி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. இரண்டு நாட்களாக கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது அமர்ந்துள்ளது. ‘‘அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தை சாப்பிடுகிறது. இந்தக்கிளி சுகவன முனிவராகவும், மதுரை மீனாட்சியாகவும் இருக்கலாம். கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், நல்ல செய்தி சொல்வதற்கு, ‘பட்சி’ வடிவத்தில் வந்திருக்கலாம்,’’ என்றார்.