இன்று சிறப்பான நாள்; கதளி கவுரி விரதம், அனந்த விரதம்.. நடராஜர் அபிஷேக தரிசித்தால் தடைகள் அனைத்தும் நீங்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2023 10:09
கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். சிவன் பார்வதிக்கு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அனந்த விரதத்தைப் பற்றி பகவான் கண்ணனே பாண்டவர்களுக்குச் சொன்னது. “அனந்த விரதம் என்பது எல்லாப் பாவங்களையும் அகற்றி அனந்த சுகத்தைத் தரும். அனந்தமாக (முடிவில்லாத ஏராளமான) செல்வம், சந்ததி முதலிய பலனையும் கொடுக்கும். பரப்ரும்மமே அனந்தன் என்ற பெயருடன் சகல வடிவாகவும் இருக்கிறார். ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இன்று புரட்டாசி சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேக தரிசித்தால் தடைகள் அனைத்தும் நீங்கும். இன்று சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், அம்மனுக்கு பூமாலையும், பெருமாளுக்கு துளசி மாலையும் சாத்தி வழிபடுதல் சிறந்த பலனைத்தரும்.